‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகள் துவக்கம்

புனே: நாடு முழு­வ­தும் ‘100 ஸ்மார்ட் சிட்டி’களை (பொலி­வுறு நக­ரங்கள்) உரு­வாக்­கப்­படும் என்று மத்­திய அரசு கடந்த ஆண்டு அறி­வித்து இருந்தது. முதல் கட்­ட­மாக ‘ஸ்மார்ட் சிட்­டி’க்கு தேர்வு செய்­யப்­பட்­டுள்ள 20 நக­ரங்களின் பட்­டி­யலை மத்­திய அரசு வெளி­யிட்­டது. அதில் முதல் கட்­ட­மாக புனே, அக­ம­தா­பாத், புவ­னேஸ்­வர், ஜபல்­பூர், கொச்சி, காக்­கி­நாடா, ஜெய்ப்­பூர்,சென்னை, கோவை உள்­ளிட்ட 20 நக­ரங்கள் முதற்­கட்­ட­மாக தேர்வு செய்­யப்­பட்­டன.

ரூ.48,000 கோடி ஒதுக்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. முதல் கட்­ட­மாக ரூ.1,770 கோடி நிதி ஒதுக்­கப்­பட்டு வளர்ச்­சிப் பணி­கள் தொடங்க உள்­ளன. மராட்­டிய மாநி­லத்­தின் புனே­யில் நடை­பெற்ற விழா­வில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்­டத்தை பிர­த­மர் மோடி நேற்று நேர­டி­யா­கச் சென்று துவங்கி வைக்­கிறார். பிற நக­ரங்களில் காணொ­ளிக் காட்சி மூலம் தொடங்கி வைக்­கிறார். பிர­த­மர் கலந்­து­கொள்­ளும் காட்­சியை பார­திய ஜன­தாவை தவிர அனைத்து உள்­ளூர் அர­சி­யல் கட்­சி­களும் புறக்­க­ணிக்க திட்­ட­மிட்­டுள்­ளன. என்­சிபி, காங்­கி­ரஸ், சிவ­சேனா எம்.என்.எஸ் ஆகிய கட்­சி­கள் மத்­திய அரசு உரிய மர­பு­களை பின்­பற்­ற­வில்லை என்று கூறி விழாவை புறக்­க­ணிக்க முடிவு செய்­துள்­ளன.