ராமரை விமர்சித்ததாக கைதான கல்லூரிப் பேராசிரியர் மகேஷ் பணியிடை நீக்கம்

ராமாயணத்தில் வரும் ராமரை விமர்சித்ததாகப் பேராசிரியர் ஒருவர் மீது வழக்குத் தொடுக்கப் பட்டு கைது செய்யப்பட்டார். அது தொடர்பாக அவர் பணிபுரிந்து வந்த மைசூரு பல்கலைக் கழகம் அவரை பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. இது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப் படுகிறது. கர்நாடக மாநிலம் மைசூரு பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை பேராசிரியராக மகேஷ் சந்திர குரு (படம்) பணியாற்றி வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி மைசூரு பல்கலைக் கழகத்தில் நடந்த பயிற்சி பட் டறையில் 'ராமாயணத்தின் முக் கிய கதாபாத்திரமான ராமன் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

"கடவுளாக வணங்கப்படும் அவரே சீதையின் நடத்தை மீது சந்தேகம் கொண்டார். சீதையைக் குற்றவாளி போல‌ நடத்தினார். ஆனால் ஊடகங்கள் ராமரை கடவுளாக மாற்றிவிட்டன," எனப் பேசினார். கர்நாடக 'சர்வோதய சேனா', 'பஜ்ரங் தளம்' உள்ளிட்ட இந்துத் துவா அமைப்பினர் ஜெயலட்சுமி புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் 295=ஏ பிரிவின் (வன்முறையைத் தூண்டும் பேச்சு) கீழ் மகேஷ் சந்திர குரு மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதே போல 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி பேராசிரியர் கே.எஸ்.பகவானுடன் இணைந்து பகவத் கீதையை எரிக்க முயன் றதாகக் கூறப்படும் விவகாரத்தி லும் மகேஷ் சந்திர குரு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்விரு வழக்குகளையும் விசாரித்த மைசூரு நீதிமன்றம் வரும் ஜூலை 5 ஆம் தேதி வரை மகேஷ் சந்திர குருவை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தர விட்டது. அதன்படி காவல் துறையினர் அவரைக் கைது செய்து கடந்த வியாழக்கிழமை மைசூரு மத்திய சிறையில் அடைத்தனர். பேராசிரியர் மகேஷ் சந்திர குரு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகா மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் மனித உரிமை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை கண்டித்து சமூக வலைத் தளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் மைசூருவில் பேராசிரியர்கள் கே.எஸ். பகவான், அரவிந்த் மாளகத்தி ஆகியோர் தலைமையில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் மைசூரு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்களும், மகிஷாசுர அமைப்பினரும் அதிகளவில் கலந்துகொண்டனர். இதே போல பெங்களூருவில் ரவீந்திர கலாக்ஷேத்திரா அருகே நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்று, பேராசிரியர் மகேஷ் சந்திர குருவை விடுவிக்கக் கோரி முழக்கங்கள் எழுப்பினர். இந்தியாவில் தலித் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒரே இதழியல் பேராசிரியர் மகேஷ் சந்திர குரு தான். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மைசூரு பல்கலைக் கழகத்தில் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 10க்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் எழுதியிருக்கிறார். தேசிய அளவிலான பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வு கட்டுரைகளைச் சமர்ப்பித் துள்ளார். கர்நாடகா பணியாளர் தேர்வாணையத்திலும் மத்தியப் பணியாளர் தேர்வாணையத்திலும் யூஜிசி குழுக்களிலும் உறுப்பினராக உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!