கூலிப்படைகள் ஆதிக்கம்: எதிர்க்கட்சிகள் புகார் - இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன்

சென்னை: கொலை செய்வ தையே தொழிலாகக் கொண்டு செயல்படும் கூலிப்படைகளின் அட்டகாசம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் சென்னை மாநகரம் கொலை நகரமாக மாறி விட்டதோ என மக்கள் அஞ்சும் வகையில் தினந்தோறும் படு பயங்கரமான கொலைகள் நடந்து வருவதாகக் கூறி உள்ளார்.

சென்னையில் அண்மையில் அடுத்தடுத்து ஆறு பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்துத் தமிழகம் முழுவதுமே இத்தகைய சம்ப வங்கள் நடப்பதாகவும் மாநி லத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது என்றும் எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. குறிப்பாக கூலிப்படையினரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதா கவும் எதிர்க்கட்சித் தலை வர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகச் சீராக இருப்பதாக முதல்வர் பெருமிதம் கொள் ளலாம். தன்னைத்தானே அவர் பாராட்டிக்கொள்ளவும் அவ ருக்கு உரிமை உண்டு. ஆனால் உண்மை நிலை அவ்வாறு இல்லை என்பதைக் கடந்த இருபது தினங்களாக தலைநகர் சென்னையில் ஒன்றன் பின் ஒன்றாக தினந்தோறும் நடை பெற்று வரும் கொலைச் சம்ப வங்கள் உறுதிப்படுத்துகின் றன," என்று முத்தரசன் கூறி உள்ளார்.

மக்கள் அச்சமின்ற வாழவும் அவர்களது உயிருக்கும் உட மைக்கும் உரிய பாதுகாப்பை வழங்கவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள அவர், கூலிப்படைகளை யும் சமூக விரோத கும்பலையும் ஒடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜக தேசிய செயற்குழு உறுப் பினர் இல.கணேசன் குற்றம் சாட்டி உள்ளார். இதற்கிடையே, பாமக நிறுவ னர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கூலிப் படைகளற்ற தமிழகத்தை உரு வாக்க அரசு முன்வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!