வெளிநாட்டினரை ஈர்க்க புதிய வகை விசா வழங்க ஏற்பாடு

புதுடெல்லி: வெளிநாட்டினரை ஈர்க்கும் வகையில் சுற்றுலா, வணிகம், மருத்துவம், மாநாடு, சினிமா படப்பிடிப்பு என எல்லா நோக்கங்களையும் உள்ளடக்கிய நீண்டகால ஒன்றிணைந்த விசா வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான யோசனையை மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய வகை விசா அதிகபட்சமாக 10 ஆண்டு காலம் வரை செல்லுபடியாகத்தக்க விதத்தில் அமையக்கூடும். அதேநேரத்தில் இந்த விசாவின் கீழ் இந்தியாவில் நிரந்தரமாக தங்கிவிடவும் முடியாது; வேலை செய்யவும் முடியாது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே விரைவில் இந்த விசா அமலுக்கு வரலாம்.

தாய்லாந்து போன்ற நாடு களுடன் ஒப்பிடுகையில் இந்தியா வுக்கு வரக்கூடிய வெளிநாட்டின ரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், இந்த வகை விசா அமலுக்கு வருகிற போது, கூடுதலான எண்ணிக் கையில் வெளிநாட்டினர் இங்கே வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!