என்ஐஏ அதிகாரி கொலை; முக்கிய குற்றவாளி கைது

புதுடெல்லி: என்ஐஏ அதிகாரி தன்சில் அகமது டெல்லி அருகே சாலையில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட பரபரப்பு வழக்கு தொடர்பாக, 35 வயது மதிப்புள்ள குற்றவாளியை காசியாபாத்தில் வைத்து போலிசார் கைது செய்துள்ளனர். குற்றவாளி யிடமிருந்து 9 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவரான முனீர், இதற்கு முன்பு மேலும் 2 கொலை வழக்குகளிலும் தொடர்புடை யவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தன்சில் அகமது, 45, கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, குடும்பத்தோடு காரில் டெல்லி திரும்பிக்கொண்டிருந்தபோது பைக்கில் வந்த இரு நபர்கள் இடையில் வழிமறித்து தன்சில் அகமதுவை சுட்டுக் கொன்றனர். மொத்தம் 24 முறை சுடப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார் தன்சில் அகமது. இந்தத் தாக்குதலில் தன்சில் மனைவி பர்சானா கதூனும் கொலை செய்யப்பட்டார். அதேநேரம், தந்தையின் அறிவுரையைக் கேட்டு, சட்டென சீட்டுக்கு அடியில் குனிந்து பதுங்கிக்கொண்ட தன்சில் அகமதுவின் 14, 12 வயதுள்ள இரு குழந்தைகளும் உயிர் தப்பினர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon