ஏடிஎம்களில் பணம் போடும் நிறுவனத்தில் ரூ.12 கோடி கொள்ளை

மும்பை: மராட்டிய மாநிலத்தில் வங்கி ஏடிஎம்களில் பணம் போடும் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகத்தில் நேற்று அதிகாலை புகுந்து 12 கோடி ரூபாயை கொள்ளை அடித்துச் சென்ற நபர்களை போலிசார் தேடி வருகின்றனர். மராட்டிய மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள டீன் ஹாத் நாக்கா பகுதியில், வாகனங்களில் சென்று அரசு வங்கிகளுக்குச் சொந்தமான ஏடிஎம்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.

நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்த நிறுவனத் தின் பூட்டை உடைத்து ஆயுதங் களுடன் உள்ளே நுழைந்த 8 பேர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவுக்கு செல்லும் இணைப்பை முதலில் துண்டித்தனர். பின்னர், உள்ளே இருந்த சுமார் 12 கோடி ரூபாய் பணத்தை அள்ளிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மூன்று மாதக் குழந்தையின் பெற்றோரான மாவீரன், கவுசல்யாவிடம் மீட்கப்பட்ட குழந்தையை போலிசார் ஒப்படைக்கின்றனர். படம்: ஊடகம்

20 Mar 2019

கடத்தப்பட்ட குழந்தை 24 மணிநேரத்தில் மீட்பு; பெண் கைது