சுவாமிக்கு மோடி கண்டனம்

புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் ரகுராம் ராஜன், நிதி அமைச்சக உயர் அதிகாரிகள் மீதான சுப்பிரமணியம் சுவாமியின் குற்றச்சாட்டுகள் பொருத்த மற்றவை, முன்னுக்குப் பின் முரணானவை என்று பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ரகுராம் ராஜனின் தேசபக்தியை சந்தேகிக்கவேண்டாம் என்று கூறி யுள்ள பிரதமர் மோடி, கடந்த சில வாரங்களாக சர்ச்சையை ஏற் படுத்திய இந்த விவகாரத்தில் முதன்முறையாக மவுனம் கலைத்துள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமியின் பெயரைக் குறிப்பிடாமல் கருத்து களைக் கூறியுள்ள மோடி, "இதுபோன்ற செயல்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. பெயருக் காகவும் வெளி உலகின் பிரபலத் துக்காகவும் கூறப்படும் கருத்துகள் நம் நாட்டுக்குப் பயன்தராது. யாராவது ஒருவர் அரசை விடவும் தான்தான் பெரியவர் என்று நினைப்பதும் நம்புவதும் தவறு," என்று தெரிவித்துள்ளார்.

"இவர் போன்ற நபர்களை ஊட கங்கள் ஒதுக்கவேண்டும். அவர் களை நாயகன்கள் போல கருதா மல் இருந்தால், தனது படுபயங் கரமான விமர்சனங்களைக் கூறி சுடச்சுட தலைப்புச் செய்தி தருபவர்கள் தானாகவே தங்களது செயல்களை நிறுத்திக்கொள்வார் கள்," என்று மோடி மேலும் கூறியுள்ளார். "ரகுராம் ராஜனின் தேசபக்தி நம் யாருடைய தேசபக்தியை விடவும் குறைந்தது அல்ல. சிலர் பேசும் முறை, ரகுராம் ராஜனுக்கு பெரிய அநீதியை விளைவித்து விடும். அவர் புரிந்த காரியங்களை நான் மனமாற பாராட்டுகிறேன். எனது நல்வாழ்த்துகள் எப்பொழு தும் அவருடன் நிலைத்து நிற்கும்," என்று டைம்ஸ் நவ் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியின்போது மோடி கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!