இளங்கோவனின் வழிகாட்டுதல் இல்லாததால் இழப்பு: குஷ்பு வருத்தம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினாலும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இளங்கோவன் தொடர்ந்த கட்சிப் பணியாற்றுவார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரசின் மிகச்சிறந்த தலைவர்களில் இளங்கோவனும் ஒருவர் என்றும் அவரது வழிகாட்டுதல் இல்லாதது இழப்புதான் என்றும் தமது சமூக வலைதளப் பக்கத்தில் குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாதவர்கள் 8 தொகுதிகளில் வென்ற காங்கிரசை குறை சொல்கிறார்கள். இளங்கோவன் தலைமையில் காங்கிரஸ் கட்சி நன்கு வளர்ச்சி அடைந்தது,” என்றும் குஷ்பு அப்பதிவில் மேலும் கூறியுள்ளார். இளங்கோவன் பதவி விலக குஷ்புவும் ஒரு காரணம் என செய்திகள் வெளியான நிலையில், இளங்கோவனுக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மூன்று மாதக் குழந்தையின் பெற்றோரான மாவீரன், கவுசல்யாவிடம் மீட்கப்பட்ட குழந்தையை போலிசார் ஒப்படைக்கின்றனர். படம்: ஊடகம்

20 Mar 2019

கடத்தப்பட்ட குழந்தை 24 மணிநேரத்தில் மீட்பு; பெண் கைது