விடுப்பு கோரிய தலைமைக் காவலர்: ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்ட ஆய்வாளர் கைது

வேலூர்: பத்து நாட்கள் விடுமுறை அளிக்குமாறு கோரிய தலைமைக் காவலரிடம் காவல்துறை ஆய்வா ளரே லஞ்சம் கேட்டது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் அவரை லஞ்ச ஒழிப்பு போலிசார் கைது செய்தனர். பொது மக்களிடம் லஞ்சம் பெற்ற நிலை மாறி, இப்போது காவல்துறையினர் தங்களுக்குள் ளேயே லஞ்சம் கேட்பது அதிர்ச்சி யும் கவலையும் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். திருப்பத்தூரைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் பணியாற்றி வந்த இவருக்கு தலைமைக் காவலராக அண்மையில் பதவி உயர்வு கிடைத்தது. இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் திருமூர்த்தியின் தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எனவே தந்தையை கவனித்துக் கொள்ள வசதியாக, தமக்கு பத்து நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என அவர், தமது மேலதிகாரியான ஆய்வாளர் பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை விடுத்தார். விடுமுறை அளிக்க முதலில் மறுத்துவிட்ட ஆய்வாளர், பின்னர் நாளொன்றுக்கு 200 ரூபாய் வீதம், 10 நாட்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்றும், அப்போதுதான் விடுமுறையில் செல்ல அனுமதிக்க இயலும் என் றும் கூறியதாகத் தெரிகிறது. தம்மிடம் ரூ.1500 மட்டுமே இருப்பதாக திருமூர்த்தி கூறிய நிலையில், ஆய்வாளர் பன்னீர்செல் வம் அதைப் பெற மறுத்துள்ளார். தலைமைக் காவலரான தம்மிடமே உயரதிகாரி லஞ்சம் கேட்பதை பொறுத்துக் கொள்ள முடியாத திருமூர்த்தி, இதை லஞ்ச ஒழிப்புப் போலிசாரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.

லஞ்ச ஒழிப்புப் போலிசார் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்டி, நேற்று முன்தினம் காலை ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக ஆய்வாளர் பன்னீர் செல்வத்திடம் அளித்தார் திரு மூர்த்தி. அதை அவர் பெற்றபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலிசார் கையும் களவு மாகப் பிடித்து கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டு விசாரணை நடக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!