மோடியை கிண்டல் செய்துள்ள புத்தகம்; தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

ஆமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயேஷ் ஷா என்பவர் ‘பெகுஜி தற்போது டெல்லியில்’ (Fekuji Have Dilli Ma) என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள் ளார். இந்நிலையில், சோலங்கி என்ற சமூக ஆர்வலர் மேற்கண்ட புத்தகம் பிரதமர் மோடியை இழிவுபடுத்துவது போல உள்ளதாகவும் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறவேற்ற பிரதமருக்கு போதிய அவகாசம் கிடைக்கவில்லை எனவும் எனவே, நீதிமன்றம் இந்தப் புத்தக விற்பனைக்குத் தடை விதிக்கவேண்டும் என்றும் ஆமதாபாத் சிவில் நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மக்கள் தங்கள் கருத்துகளைப் புத்தகம் மூலம் வெளிப்படுத்த முழு உரிமை உள்ளதால் புத்தகத்துக்கு தடை விதித்தால் அது கருத்து சுதந்திரத்தை மீறும் வகையில் அமையும் என்று தெரிவித்து புத்தகத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.