மும்பையில் எரிவாயு உருளை வெடித்ததில் 8 பேர் பரிதாப பலி

மும்பை: மருந்துக் கடையில் எரிவாயு உருளை திடீரென வெடித்துச் சிதறிய விபத்தில் எட்டுப் பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இச்சம்பவம் மும்பையின் புற நகர்ப் பகுதியான அந்தேரியில் நேற்றுக் காலை நிகழ்ந்துள்ளது. இங்குள்ள வணிக வளாகத் தின் இரண்டாவது தளத்தில் மருந்துக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. முதல் தளத்தில் சில குடும்பத்தினர் வாடகைக்கு குடி யிருந்து வருகிறார்கள். இந்நிலையில் மருந்துக் கடையில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு உருளை ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இதில் மருந்துக் கடையில் மட்டுமல்லாமல் முதல் தளத்தில் உள்ள குடி யிருப்பிலும் தீப்பிடித்தது.

இதனால் அங்கு குடியிருந்த வர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீடுகளை விட்டு அலறி யபடியே வெளியேறினர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். எனினும் வீடு களுக்குள் சிக்கிக்கொண்ட 8 பேரை உடல் கருகிய நிலையில் சடலமாகத்தான் மீட்க முடிந்தது. தீயணைப்புப் பணியில் மூன்று தீயணைப்பு வண்டிகளும் தண் ணீர் டேங்கர்களும் ஈடுபடுத்தப் பட்டன. இதன் காரணமாகவே தீயை வேகமாக அணைக்க முடிந்ததாகவும் இல்லையேல் அண்டை வீடுகளிலும் தீ பரவி யிருக்கும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். எரிவாயு உருளை திடீரென வெடித்ததற்கான காரணம் இது வரை தெரியவில்லை. இது குறித்து போலிசார் தீவிர விசா ரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்தும் எட்டுப் பேர் பலியானதும் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!