‘20 ஆண்டு சிறைவாசம் முடிந்ததால் விடுவிக்க இயலாது’

புதுடெல்லி: ஆயுள் தண்டனை பெற்றவர்கள் இருபது வருட சிறைவாசத்தை முடித்த பின்னர் தன்னால் விடுவிக்கப்பட இயலாது என உச்ச நீதிமன்றம் தெரிவித் துள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி கள் தீபக் மிஸ்ரா, ‌ஷிவா கிர்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. அப்போது, தண்டனை பெற்ற வர்களை விடுவிப்பதால் சமுதாயத் தின் மீதும் விடுவிக்கப்பட்டவர்கள் மீதும் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடிக் கருத்தானது ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேர் விடுதலையை கேள்விக்குறியாக்கி உள்ளது என சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஏழு பேரும் கடந்த 25 ஆண்டு களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இதைச் சுட்டிக் காட்டி தங்களை விடுவிக்க வேண் டும் என அவர்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர். தன்னை விடுதலை செய்யக் கோரி ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கும் தாக்கல் செய்துள் ளார். உச்ச நீதிமன்றம் தற்போது தெரிவித்துள்ள கருத்தால் நளி னிக்கும் இதர ஆறு பேருக்கும் விடுதலை விவகாரத்தில் பின்ன டைவு ஏற்பட்டுள்ளதாகக் கருதப் படுகிறது.

"இருபது ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தால் ஆயுள் தண்டனை முடிந்துவிட்டதாக அர்த்தமல்ல. ஆயுள் தண்டனை எனில், ஆயுள் முழுவதும் சிறை வாசம் அனுபவிப்பதுதான். எனி னும் குறிப்பிட்ட சில காரணங் களின் அடிப்படையில் சிறை வாசத்தைக் குறைப்பது குறித்து அரசு முடிவெடுக்க அதிகாரம் உண்டு," என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆயுள் தண்டனைக் கைதி ஒருவரை விடுதலை செய்வது தொடர்பாக குஜராத் உயர் நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கிலேயே உச்ச நீதிமன்றம் இவ்வாறு கருத்து கூறியுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!