மின்தூக்கி மோதி வாலிபர் பலி

லக்னோ: அரி­யானா மாநி­லம், பல்­வால் மாவட்­டத்தைச் சேர்ந்த சதிஷ் (21) என்­ப­வர் உடல்­ ந­லம் பாதிக்­கப்­பட்­டி­ருந்த தனது தாயா­ருக்கு உயர் சிகிச்சை அளிப்­ப­தற்­காக உத்­த­ரப்­பி­ர­தே­ச மாநி­லத்­தில் உள்ள மதுரா நக­ரில் உள்ள ஒரு தனி­யார் மருத்­து­வ­மனை­யில் தாயாரைச் சேர்த்து­விட்டு அவ­ருக்குத் துணை­யாக சதிஷ் அங்­கேயே தங்கி இருந்தார். வியா­ழக்­கி­ழமை இரவு சில மருந்­து­களை எழு­தித்­தந்த மருத்­து­வர்­கள் அவற்றை உட­ன­டி­யாக வாங்­கி­வ­ரும்படி கூறி­னர்.

மூன்றா­வது மாடி­யில் இருந்து முதல் மாடி­யில் உள்ள மருந்துக் கடைக்­குச் செல்­வ­தற்­காக வந்த சதிஷ், மின்­தூக்­கி­யின் பொத்­தானை அழுத்­தினார். கதவு மட்­டும் திறந்தது, மின்­தூக்கி அறையை அங்கு காண­வில்லை. திறந்த கத­வின் வழி­யாக மின்­தூக்கி இயங்­கும் பாதையை சதிஷ் கீழே குனிந்­து பார்த்­தார். அதற்­குள் நான்கா­வது மாடி­யில் இருந்து வேக­மாக வந்த மின்தூக்கி, சதி­‌ஷின் தலை­யில் கொடூரமாக மோதி­யது. மோதிய வேகத்­தில் கீழே விழுந்த சதி­ஷ் மின்­தூக்­கி­யின் அடி­யில் சிக்கி மாண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!