பொன்னார்: குமரியில் பயிற்சி பெறும் பயங்கரவாதிகள்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்மையில் ஆந்திராவில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

"ஆந்திராவின் சில பகுதிகள், தமிழகத்தில் குமரி மாவட்டம் உள்ளிட்ட பல இடங்களில் பயங்கர வாதிகளுக்கு மறைமுகமாக பயிற்சி அளிக்கிறார்கள். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம். சட்டம், ஒழுங்கு நிலை சீராக இருப்பதை மாநில அரசு கவனிக்க வேண்டும்," என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

தமிழகத்தில் தீவிரவாத நட மாட்டம் அறவே இல்லை என அரசு, காவல்துறை வட்டாரங்கள் தொடர்ந்து கூறி வரும் நிலையில், மத்திய அமைச்சர் ஒருவரே தமிழகத்தில் பயங்கரவாதிக ளுக்குப் பயிற்சி அளிக்கப்படுவ தாக வெளிப்படையாகக் கூறி இருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!