புதுடெல்லி: உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பிரியங்காவை களமிறக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பது ராகுலின் தோல்வியை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று பாஜக தெரிவித்தது. "உத்தரப்பிரதேச தேர்தலில் பிரியங்காவின் பிரவேசம் காங்கிரசின் வாரிசு அரசியலைத் தோலுரித்துக் காட்டுகிறது. மேலும் அரசியலில் ராகுல் காந்தி தோல்வியடைந்துவிட்டார் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது," என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா சொன்னார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்பார் என்று கூறப்பட்ட நிலையில் பிரியங்காவை அரசியலுக்கு இழுக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.