திருநள்ளாறு அருகே பழங்கால நகைகள் கண்டெடுப்பு

காரைக்­கால்: திருநள்ளாறு அருகே அகலங்கண் மேலத்தெருவில் கிராம கழிவுநீர்த் தொட்டி கட்டு வதற்கு 5 அடி ஆழத்தில் நேற்று முன்தினம் பள்ளம் தோண்டப் பட்டது. அப்போது சிறிய சிலை­கள் மற்­றும் ஆப­ர­ணங்கள், செப்புப் பானை ஒன்றில் சாமி உருவம் பதித்த செப்புத் தகடு, பீடம், குடுவை, வளையல் போன்ற 20க்கும் மேற்பட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அந்த சாமி சிலைகள் 400 முதல் 500 கிராம் எடையுள்ளவை. சுமார் 6 அடி ஆழம் தோண்­டிய போது சிறிய குடம் போன்ற உலோ கம் தட்­டுப்­பட்­டது.

மேலும் தோண்­டிய­போது அதில் உலோ­கத்­தா­லான சிறிய அம்மன் சிலை­கள் மற்­றும் ஆப­ர­ணங்கள் இருந்தது தெரி­ய­வந்தது. அதனை­ய­டுத்­து திரு­நள்­ளாறு வட்­டாட்­சி­யர் அலு­வ­ல­கம் மற்­றும் காவல் நிலை­யத்­துக்­குத் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது. உட­ன­டி­யாக அங்கு வந்த வரு­வாய்த்­துறை­யி­னர் சிலை மற்­றும் ஆப­ர­ணங்கள், தகடுகள் ஆகியவற்றைக் கைப்­பற்­றி­னர்.

இனி அந்த இடத்­தில் அனு­ம­தி­யின்றி பள்­ளம் தோண்டக்­கூ­டாது என்று உத்­த­ர­விட்ட வரு­வாய்த் துறை­யி­னர் கைப்­பற்­றிய பொருட்­களை ஆட்­சி­யர் கேச­வ­னி­டம் ஒப்­படைத்தனர். இந்தச் சுற்­று­வட்­டா­ரப் பகு­தி­களில் பள்­ளம் தோண்­டும்­போது எவ்­விதப் பொருட்­கள் கிடைத்­தா­லும் வரு­வாய்த் துறை­யி­ன­ருக்­குத் தக­வல் தெரி­வித்து அவர்­களி­டம் ஒப்­படைக்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்டனர். கைப்­பற்­றப்­பட்ட பொருட்­கள் எந்த உலோ­கத்­தால் ஆனவை மற்­றும் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பது தொல்­பொ­ருள் துறை­யி­ன­ரின் ஆய்­வுக்­குப் பின்னரே தெரி­ய­வ­ரும் என்ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!