திமுகவை அழிக்கச் சதி நடக்கிறது: ஸ்டாலின் புகார்

தஞ்சை: கொள்கலன் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடி ரொக்கப் பணம் யாரு டையது என்ற உண்மை விரைவில் தெரிய வரும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தஞ்சையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், திமுகவை ஒழிக்க ஒருசிலர் சதித்திட்டம் வகுத்துள்ள தாகக் குற்றம்சாட்டினார். திமுகவை ஒழிக்க நினைத்தவர்கள் அரசியலில் அனாதைகளாக்கப்பட்டுப் போனதாகக் குறிப்பிட்ட அவர், திமுகவுக்கு வெற்றி யும் தோல்வியும் ஒன்றுதான் என்றார். "சட்டப்பேரவைத் தேர்தல் நடப்பதற்கு சில நாட்க ளுக்கு முன்னதாக திருப் பூரில் 3 கொள்கலன்களில் கொண்டு செல்லப்பட்ட பணம் பிடிபட்டது. பிடிபட்ட 18 மணி நேரம் கழித்து தான் ஒரு வங்கி பணத் துக்கு உரிமை கொண்டாடு கிறது. அப்பணம் ஆந்திரா வுக்கு கடத்தப்பட்டது.

"தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் அது ஆந்திராவுக்கு கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து விசாரிக்க வேண்டும் என திமுக எம்பி இளங்கோவன் பிரதமர் மோடியை சந்தித்து மனு கொடுத்துள்ளார்," என்றார் ஸ்டாலின். தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வரும் முன்பே பிரதமர் மோடி ஜெயலலிதா வுக்கு வாழ்த்து கூறிய தாகக் குறிப்பிட்ட அவர், இதன்மூலம் சதித்திட்டம் உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!