போலிஸ் கைது நடவடிக்கைக்கு அஞ்சி ஊரையே காலி செய்த 8 கிராம மக்கள்

திருச்சி: காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு அஞ்சலி மணப் பாறை அருகே எட்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஊரையே காலி செய்துவிட்டு வெளியூர்களுக்குச் சென்றுவிட்டனர். இது திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துவரங்குறிச்சி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் முத்தாளம்மன் கோவில் அமைந் துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டுக்கான திருவிழா குறித்து அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. அப்போது இருதரப்பினர் மத்தி யில் வாக்குவாதம் மூண்டு, அது பின்னர் மோதலில் முடிந்தது. இது தொடர்பாக இருவரை போலிசார் விசாரணைக்காக தடுத்து வைத்தனர்.

இதனால் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள எட்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவேசமடைந்தனர். தடுத்து வைக்கப்பட்ட இருவரையும் விடுவிக்கக் கோரி துவரங்குறிச்சி காவல் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. இதையடுத்து போலிசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க வேண்டியிருந்தது. மேலும் போலி சார் மீது தாக்குதல் நடத்திய புகாரின் பேரில் எட்டு கிராமங்களைச் சேர்ந்த 178 பேர் மீது வழக்குப் பதிவானது. இதில் 28 பேர் கைதாகியுள்ளனர்.

இந்நிலையில் மேலும் பலர் மீது வழக்குப் பதிவாகலாம், அவர்களும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தின் பேரில் 8 கிராமங் களைச் சேர்ந்தவர்கள் ஒட்டு மொத்தமாக ஊரையே காலி செய்துவிட்டு வெளியூர்களில் உள்ள உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அங்கு ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பும் பதற்றமும் நீடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!