‘கச்சத்தீவு தாரை வார்ப்புக்கு அதிமுகவும் காரணம்’

ஈரோடு: கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு திமுக மட்டுமல்லாமல் அதிமுகவும் காரணம் என்று மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் குற்றம் சாட்டியிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய திரு ராதா கிருஷ்ணன், "கடந்த 1974ல் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது திமுக அரசு இருந்தது. அப்போது நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக உள்நோக்கத்துடன் வெளி நடப்பு செய்தது. தாரை வார்ப்புக்குக் காரணமாக இருந்துவிட்டு தற்போது மீட்க வேண்டும் என்று பேசு கின்றனர்," என்றார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதை சுட்டிக்காட்டிய அவர், இதுவரை, சென்னை, தூத்துக்குடி துறைமுகங் களுக்கு அனுப்பி, அங்கிருந்து கொழும்பு, சிங்கப்பூர் மூலமாகத்தான் பிற நாடுகளுக்குப் பொருட்களை அனுப்ப வேண்டியிருந்தது. குளச்சல் துறைமுகத்தால், நேரடியாக பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வசதி ஏற்பட்டுள்ளது," என்று குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!