ஜெர்மனி தொழில்நுட்பத்துடன் சென்னை ஐசிஎஃப்பில் ரயில் பெட்டிகள் தயாரிப்பு

சென்னை: மின்சார ரயில், டீசல் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி களைத் தயாரிக்கும் சென்னை ஐசிஎஃப் ரயில் தொழிற்சாலை, அடுத்த கட்ட முயற்சியாக ஜெர் மனி நிறுவனமான எல்எச்பியுடன் இணைந்து அந்நாட்டுத் தொழில் நுட்பத்துடன் ரயில் பெட்டிகளைத் தயாரித்து வருகிறது. மேலும் முக்கிய விரைவு ரயில்களில் இந்தப் புதிய வகை ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. மும்பை நகருக்குத் தேவையான மின்சார ரயில்கள் தயாரிக்கும் பணியை அது முடுக்கிவிட்டுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்த ஐசிஎஃப் அதிகாரி ஒருவர், "நடப்பு நிதியாண்டில் 581 எல்எச்பி வகை ரயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயித் துள்ளோம். இதுவரை, 85 பெட்டி கள் தயாரித் துள்ளோம். இதற் கிடையில் மும்பை நகர மின்சார ரயில் சேவைக்கு 864 பெட்டிகள் தயாரிக்க வேண்டி யிருந்தது. கடந்த ஆண்டுகளில் 528 ரயில் பெட்டிகள் தயாரித்து அனுப்பப் பட்டன," என்றார். இந்த நிலையில் மும்பை மின் சார ரயில் சேவைக்கு 336 பெட் டிகள் தயாரிக்கும் பணியை ஐசி எஃப் துரிதப் படுத்தியிருக்கிறது.

ஜெர்மனி தொழில்நுட்பத்துடன் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. படம்: இந்திய ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!