சகோதரருடன் சேர்ந்து மகனை அடித்துக் கொன்ற தாய் கைது

காரைக்குடி: காதல் திருமணம் செய்த இளையரை அவரது தாயும் மாமாவும் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையுண்ட ஹரிஹரன் (23 வயது), தனது கல்லூரியில் படித்த ரம்யாவை காதலித்து மணந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந் தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் காதலை எதிர்த்தனர். எதிர்ப்பை மீறி திருமணம் நடந்தது. இந்நிலையில் கருத்து வேறு பாடு காரணமாக காதல் தம்பதியர் பிரிந்தனர். இதையடுத்து ரம்யா தாய் வீட்டிற்குச் செல்ல, ஹரிஹரனும் தன் பெற்றோர் வீட்

டிற்கு வந்தார். நேற்று முன்தினம் அவர் தனது தாய் நாகேஸ் வரியை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது சகோதரரின் உதவியுடன் மகனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளார். இதை யடுத்து இருவரும் கைதாகி உள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!