வெளிநாட்டு வேலை என கூறி ரூ.2 கோடி மோசடி

வேலூர்: சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி இரண்டு கோடி ரூபாய் வரை சுருட்டிய ஏமாற்றுப் பேர்வழியை வேலூர் போலிசார் கைது செய்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த 46 வயதான வேல்ராஜ் என்ற அந்த ஆடவர், வேலூர் மாவட்டம் ஆம்பூ ரில் தங்கியிருந்து இந்த மோசடியைச் செய்துள்ளார். ரெட்டித்தோப்பு என்ற பகுதியில் வீடு எடுத்து தங்கிய வேல்ராஜ், தனது வீட்டின் முன்பகுதியில் அலுவலகம் அமைத்துள்ளார். பின் னர் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்துள்ளார்.

அதைக் கண்டு பலர் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். மேலை நாடுகளில் வேலைக்கு முயற்சித்து வந்த அவர்களிடம் மலேசியா, சிங்கப்பூர், கனடா உள் ளிட்ட நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்துள்ளார். தச்சர், தாதி, பெயின்டர் பணி களை தம்மால் வாங்கித் தர முடியும் என வேல்ராஜ் கூறியதை நம்பி பலர் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை தந்துள்ளனர். கிட்டத்தட்ட நூறு பேரிடம் அவர் ரூ.2 கோடி வரை வசூல் செய்துள்ளார். ஆனால் வேல்ராஜ் மூலம் வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்ற கனவுடன் காத்துக் கிடந்த வர்களுக்கு இறுதியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. வேலைக்காகக் காத்திருந்தவர்கள் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, கடந்த ஏப்ரல் மாதம் காவல்துறையில் புகார் செய்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!