‘மதுக்கடையை அகற்றும் வரை ஓயமாட்டோம்’

சென்னை: சென்னை பட்டினப் பாக்கம் பேருந்து நிலையம் அருகே கடந்த ஒன்பது ஆண்டு களாக 'டாஸ்மாக்' மதுக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த 'டாஸ்மாக்' கடையின் 'பார்' மூடப்பட்டது. இதையடுத்து குடிமகன்கள் சாலையோரமாகவும் பேருந்து நிலையத்திலும் மதுக் குடிக்கத் தொடங்கினர். நாளடைவில் அந்தப் பகுதியே ஒரு திறந்த வெளி 'பார்' போல மாறியது.

குடிமகன்கள் தொந்தரவு தலை தூக்கியதையடுத்து இந்த 'டாஸ்மாக்' கடையை அகற்ற வேண்டும் என்ற போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே வழிப்பறிக் கொள்ளையனைப் பிடிக்கும் முயற்சியில் அதே பகுதியைச் சேர்ந்த ஆசிரியை நந்தினி உயிரிழந்தார். கொள்ளையன் குடிபோதை யில் இருந்ததால் மதுதான் பிரச்சினைக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் கொதித்து எழுந்தனர். அந்தப் பகுதியில் உள்ள 'டாஸ்மாக்' கடையை அகற்றவேண்டும் என்று போராட்டம் நடத்திய அவர்கள் கல்வீச்சிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக அப்பகுதி பொது மக்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அந்த மதுக் கடை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் சம்பந்தப்பட்ட கடை முன்பு பாதுகாப்புக்காக போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்றும் ஐந்தாவது நாளாக அங்கு போராட்டம் நீடித்தது. அப்பகுதி பெண்களுடன் 'மக்கள் அதிகாரம்' அமைப்பினரும் சேர்ந்து நேற்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மதுக்கடையை மூடும்வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கள் உள்பட 50 பேரை போலி சார் கைது செய்தனர். அப்போது போலிசாருக்கும் பெண்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெண் போலிசார் ஆக்னஸ் என்ற பெண்ணை குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

பெண்களைக் கைது செய்யும் போலிசார். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!