எச்.ராஜா: சட்டம் ஒழுங்கு நிலை மோசமாக உள்ளது

மதுரை: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் பின்னடை வுக்கு மக்கள் நலக் கூட்ட ணியின் ஒருங்கிணைப்பா ளர் வைகோவே காரண மாகிவிட்டார் என்றார். எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று குறிப்பிட்ட அவர், தமிழகத் தில் தடை விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் போன்றவற்றை மீண்டும் நடத்துவதற்கு புதிய சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.

"தமிழகத்தைப் பொறுத்த வரை சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ப தில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அதனால் குற்றவாளிகளை ஒடுக்க போலிசார் தீவிர நடவ டிக்கை எடுக்க வேண்டும். "குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும். கொலை செய்தால் பிணை யில் வெளியே வந்துவிட லாம் என்ற நிலை மாற வேண்டும்," என்றார் ராஜா. மழைக்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத் தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லா சட்டம் கொண்டு வரப்படும் என்று குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த மத்திய அரசு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!