சுவாதி படுகொலை: குற்றவாளியை அடையாளம் காட்டினர்

சென்னை: சுவாதி கொலை வழக் கில் குற்றவாளியை அடையாளம் காண்பதற்கான அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. இதற்காக உயர்நீதிமன்றம் நியமித்த மூத்த நீதிபதி ஆர்.சங்கர் முன்னிலையில் நடந்த அணிவகுப்பிற்கு சுவாதி யின் தந்தை வரவழைக்கப்பட் டிருந்தார். நாட்டையே உலுக்கியெடுத்து சுவாதி படுகொலை வழக்கு தொடர்பில் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளையர் கைது செய்யப்பட்டுள்ளார். ரயில் நிலையத்தில் வைத்து, சுவாதியை இவர் அரிவாளால் வெட்டியதை சிலர் நேரில் கண்டுள்ளனர்.

ரயில் நிலைய தளமேடையில் உள்ள உணவகத்தில் பணியாற்றும் ஊழியர், தமிழ்ச்செல்வன் எனும் ஆசிரியர் உள்ளிட்டோர் அடை யாள அணிவகுப்புக்கு அழைக்கப் பட்டதாகத் தெரிகிறது. ராம்குமாருடன் வேறு சிலரும் வரிசையில் நிற்க வைக்கப்பட்டு, அடையாள அணிவகுப்பு நடைபெற் றது. முன்னதாக அடையாள அணிவகுப்பை நடத்த மூத்த நீதி பதி ஆர்.சங்கரை நியமித்து எழும்பூர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தர விட்டிருந்தார். அதன்படி நீதிபதி சங்கர் முன் னிலையில் நேற்று மதியம் சென்னை புழல் சிறையில் அடை யாள அணிவகுப்பு நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களி டம் பேசிய நீதிபதி சங்கர், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற வழி காட்டுதல்களின்படி அணிவகுப்பு நடைபெற்றது என்றும், இது தொடர்பான விவரங்கள் உயர் நீதி மன்றத்தில் அளிக்கப்படும் என் றும் தெரிவித்தார். இதற்கிடையே தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், தனது சகோதரர் படித்துக் கொண்டே இருப்பார் என ராம்குமாரின் சகோதரி கூறி யுள்ளார். "ராம்குமார் கொலை செய்திருப்பார் என்று நம்பமுடிய வில்லை. கொலையை திசைதிருப்ப முயற்சி நடக்கிறது," என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!