திமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் அதிரடி சோதனை

எஸ் ஜெகத்ரட்சகனுக்குச் (படம்) சொந்தமான நாற்பது இடங்களில் நேற்று நூற்றுக்கு மேற்பட்டவருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னை அடையாறிலும் நுங்கம்பாக்கத்திலும் உள்ள அவரது வீடுகள், சென்னை, புதுச்சேரியில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், விழுப்புரத்தில் இருக்கும் மது ஆலை, சென்னை பாரத் பல்கலைக் கழகம், ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி உட்பட பல இடங்களில் போலிஸ் பாதுகாப்புடன் நேற்று ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஜெகத்ரட்சகன் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வந்த புகாரை அடுத்து இந்தச் சோதனைகள் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது. சோதனையில் குற்றங்கள் நிகழ்ந்ததற்குச் சான்றாக பல ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கறுப்புப் பணம் குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!