சிங்கப்பூரில் வேலை செய்தவர்: மனைவியுடன் பெண் வேடத்தில் சென்றபோது அடி, உதை

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் சேகர், 27. சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த இவர் திண்டி வனத்தைச் சேர்ந்த இந்திரா, 24, என்பவரைத் திருமணம் செய்து இருந்தார். மணம் முடித்த பின்னர் சிங்கப் பூர் சென்றாலும் ஊருக்குத் திரும்பி வருவதிலேயே சேகர் ஆவலாக இருந்தார். ஆனால், 'சிங்கப்பூரில் வேலை செய்ததால் தான் எனது மகளைக் கொடுத்தேன். அதனால் வேலையை விட்டு இங்கு வந்துவிடாதே' என்று மாமியார் எச்சரித்துள்ளார்.

அதனைக் காதில் வாங்கிக் கொள்ளாத சேகர், ஒரே முடிவாக சிங்கப்பூர் வேலையைக் கைவிட் டார். நேராக, திண்டிவனத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சுடிதார் உடை அணிந்து பெண் வேடத்தில் சென்றார் அவர். மனைவியிடம் இந்த ரகசியத்தை ஏற்கெனவே சொல்லி இருந்ததால், முகத்தை மூடியவாறு பெண் வேடத்தில் சேகர் வந்ததும் அவருடன் இந் திரா சேர்ந்து வெளியில் சென்றார். வீதியில் இருவரும் நடந்து சென்றபோது அவர்களைக் கண்டோருக்குச் சந்தேகம் வந்தது.

காரணம், பெண் வேடத்தில் இருந்த சேகர் ஆண்களுக்கான காலணியை அணிந்திருந்தார். இதனால், குழந்தை கடத்தலில் ஈடுபடுபவனாக இருக்கலாம் என்று பேசிக்கொண்ட பொதுமக் கள் அவ்விருவரையும் சுற்றிவளைத் தனர். அதனால் முகத்தை மூடி இருப்பது ஓர் ஆண்தான் என்பதை உறுதி செய்த அவர்கள் கண் ணிமைக்கும் நேரத்தில் சேகரை அடித்துத் தாக்கத் தொடங்கினர். சேகர் அணிந்திருந்த சுடிதாரை கழற்றச் சொல்லி பார்த்த ஊர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதற்குள் தகவல் அறிந்து வந்து சேர்ந்த போலிசார், வழக்குப் பதிவு செய்யாமல் சேகரை எச்சரித்து அனுப்பினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!