ஓமான் நாட்டில் கட்டிப்போட்டு சித்திரவதை: 13 பெண்களை மீட்க மத்திய அரசு உறுதி

மதுரை: ஓமான் நாட்டில் சித்திர வதைக்கு ஆளாகியுள்ள 13 தமிழகப் பெண்களை மீட்க நட வடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மனைவி மேகலா. சிவக்குமாருக்கு இருதய கோளாறு இருப்பதால் மருத்துவச் செலவிற்கு ரூ.2 லட்சம் தேவைப்பட்டது. இந்நிலையில், ஓமான் நாட்டில் வீட்டு வேலை செய்ய ஆட்கள் தேவைப்படுவதை அறிந்த மேகலாவும் இதர 13 பெண்களும் ஏஜெண்டுகளை அணுகினர். அவர்கள் அனைவரும் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ஓமானுக்கு வேலைக்காக அனுப்பப்பட்டனர்.

அங்கு சென்ற சில நாட்க ளிலேயே தம்மை தமது முதலாளி துன்புறுத்துவதாக கைபேசி மூலம் மேகலா தமது வீட்டுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தம்மைக் கட்டிப்போட்டு சித் திரவதை செய்வதாகவும் தம்மு டன் வேலைக்கு வந்த 13 பெண் களும் கொடுமைகளுக்கு ஆளாகி வருவதாகவும் அப்பெண் தெரி வித்தார். இதனால் மேகலாவின் தாய் கலாவதி மற்றும் குழந்தை கள் மேகலாவை மீட்டு இந்தியா விற்குத் திரும்ப அழைத்துவர உதவ வேண்டும் என மதுரை ஆட்சியரிடம் புகார் மனு அளித் தனர். அத்துடன் மேகலாவை மீட்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவரது தாயார் கலாவதி ஆள் கொணர்வு மனுத் தாக்கல் செய் திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருந்த நிலையில், ஜூன் 30ஆம் தேதி மேகலா மதுரைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். மேகலாவின் உடலில் காயங்கள் இருந்ததால் நாடு திரும்பிய மறுநாளே மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!