திருமணம் நடக்க மூன்று மணி நேரமே இருந்த நிலையில் குளி யலறையில் மணமகன் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலத் தில் நிகழ்ந்துள்ளது. தக்சிண கன்னட மாவட்டம், பாஞ்சா எனும் ஊரைச் சேர்ந் தவர் சச்சின், 32. இவருக்கும் காயத்ரி என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடப்பதாக இருந்தது. இதனால் இருவரின் வீடுகளும் விழாக்கோலம் பூண் டிருந்தன. மணநாளன்று காலை 8.30 மணியளவில் முகச் சவரம் செய்வதற்காகத் தமது வீட்டின் குளியலறைக்குள் நுழைந்தார் சச்சின். உள்ளே காலை வைத் ததுமே அவர் வழுக்கி விழ, தலையில் பலமாக அடிபட்டு அவர் மயக்கநிலைக்குச் சென்று விட்டார். உடனே, அங்கிருந்து 50 கி.மீ. தூரத்தில் இருக்கும் புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்து வர்கள் கூறினர். இதையடுத்து, கொண்டாட்ட மாக இருக்கவேண்டிய நாள் சோகமயமானது. இதற்கிடையே, கேரள மாநி லத்திலும் இதே போன்றதொரு சம்பவம் நிகழ்ந்தது. கோட்டயம் அருகே கருக் கச்சல் எனும் ஊரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான 32 வயது அனில் குமாருக்கு நேற்று திரு மணம் நடக்கவிருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, கோட் டயம் மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் அவர் அனுமதிக் கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அனிலின் திருமணத்திற்காக வந்திருந்த உறவினர்களும் நண் பர்களும் அவரது இறுதிச் சடங் கில் பங்கேற்றுவிட்டு கண்ணீ ருடன் வீடு திரும்பினர்.
மணநாளன்று சோகம்: குளியலறையில் வழுக்கி விழுந்து மணமகன் மரணம்
15 Jul 2016 08:29 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Jul 2016 08:27
அண்மைய காணொளிகள்

சிங்கப்பூரில் $18,888 வென்ற வெளிநாட்டு ஊழியர்

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 2

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் எட்டாவது குடமுழுக்கின் காட்சிகள், கருத்துகள்.

புதிதாகப் பொலிவு பெற்றுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 1

யீஷூன் குடியிருப்பு வட்டாரத்தில் கிட்டத்தட்ட 30 புறாக்கள் இறந்து கிடந்தன

லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற மருத்துவர் ஷாமினி ராதாகிருஷ்ணன்.

விலங்குப் பராமரிப்பில் மனநிறைவு

ஸ்ரீ மாரியம்மன் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகருக்கு ஆறு ஆண்டு சிறை

ஏழு ஆண்டுகளாக தச்சு வேலை செய்து வரும் ஜோஷுவா ராம் பிரகாஷ்

மன உளைச்சலை போக்க ரத்தினக்கற்களின் நிறத்தை ஆராயும் சரவணன் காசிநாதன்

புக்கிட் பாத்தோக் குடும்பதின விழா

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 2

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 1

சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தின் புதிய கலை நிறுவல்கள்

சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும் ரூ.2000 நோட்டு விவகாரம் (1)

2024ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து நீண்ட பொது விடுமுறைகள் உள்ளன

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!