தமிழ்நாட்டில் தொகுதிக்கு 20,000 போலி வாக்காளர்கள்

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் சுமார் 15,000 முதல் 20,000 போலி வாக்காளர்கள் இருப்பதை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்துள்ளது. கடந்த மே மாதம் நடந்த சட்ட மன்றத் தேர்தலின்போது பயன் படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் ஆயிரக்கணக்கான வாக்காளர் களின் பெயர்கள் இருமுறை இடம் பெற்றிருப்பதாகவும் போலி வாக் காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதா கவும் திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் தேர்தல் ஆணையத் திடம் புகார் அளித்தனர். இதையடுத்து, போலி வாக்காளர் களை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தபோதும் அந்தப் பணி முழுமையடையவில்லை. இந்த நிலையில், போலி வாக்கா ளர்களை அடையாளம் காண புதிய மென்பொருள் ஒன்றை தேர்தல் ஆணையம் பயன்படுத்தி வருகிறது.

ஒரு தொகுதியில் ஒரு வாக்கா ளரின் பெயர், முகவரியைப் பதிவு செய்தால் அதே பெயரில் உள்ள போலி வாக்காளர்களை, தந்தை பெயர், முகவரி, வயது, புகைப்படம் ஆகியவை போலியாக இருந்தாலும் வேறு தொகுதியில் அவர்கள் இருந்தாலும் இந்தப் புதிய மென் பொருள் மூலம் கண்டுபிடித்து விடலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இப்போது ஒவ்வொரு தொகுதி யிலும் உள்ள போலி வாக்காளர் களைப் பற்றிய விவரங்கள் சேக ரிக்கப்பட்டு வருகின்றன. இதற் காக ஒவ்வொரு தொகுதிக்கும் கூடுதலாகக் கணினிப் பணியா ளர்கள் நியமிக்கப்பட்டு, கடந்த ஐந்து நாட்களாக வாக்காளர்கள் சரிபார்ப்புப் பணி நடந்து வருகிறது. அதில், ஒவ்வொரு தொகுதி யிலும் சுமார் 15,000 முதல் 20,000 போலி வாக்காளர்கள் இருப்பது தெரிய வந்துள்ளதாகத் தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார். போலி வாக்காளர் விவரத்தைத் தனியாகப் பட்டியலிட்டு வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து அவர்களின் பெயர் நீக்கப்படும் என்றும் இறந்து போன வாக்காளர்களின் பெயர் களும் பட்டியலிலிருந்து அகற்றப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!