‘இந்தியாவில் ஐஎஸ் அமைப்பின் தனிப் பிரிவுகள் இருக்கலாம்’

வெளிநாட்டு நிதியுதவியுடன் நடத் தப்படும் இஸ்லாமிய சமயப் பள்ளி களின், போதகர்களின் செல்வாக் கைப் பயன்படுத்தி 'ஸ்லீப்பர் செல்' எனப்படும் தனிப் பிரிவுகளை ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் இந்தியாவில் ஏற்படுத்தி இருக்க லாம் என்று இந்தியாவிற்கான புதிய ஈராக் தூதர் ஃபக்ரி ஹசன் அல் இஸா தெரிவித்துள்ளார். தெற்காசியாவில் அதிகரித்து வரும் சுயதீவிரவாதப் போக்கை குறிப்பிட்டுப் பேசிய திரு இஸா, எம்மாதிரியான இஸ்லாமை அவர் கள் போதிக்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்வதற்காக இஸ்லாமிய சமயப் பள்ளிகளையும் போதகர் களையும் இந்தியா அணுக்கமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக 'தி இந்து' செய்தி கூறியது.

"இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் வெளிநாட்டு உதவி யுடன் செயல்படும் சமயப் பள்ளி களில் போதிக்கப்படும் குறிப்பிட்ட வகையான 'இஸ்லாம்'தான் ஐஎஸ் அமைப்பு தோன்றக் காரணம். அத்தகைய போதனைகள் ஐஎஸ் அமைப்பின்பால் பலரை ஈர்க்கச் செய்துவிடும். புதுவகையான இத்த கைய சமயப் பள்ளிகள் மனிதாபி மான, சகிப்புத்தன்மைமிக்க இஸ்லா மிய பாரம்பரியத்தை அழித்து வரு கின்றன," என்று அவர் சொன்னார். ஐஎஸ் தொடுத்துள்ள போரில் இஸ்லாமிய சமயப் பள்ளிகளும் தொலைக்காட்சி வழி சமய போதனையில் ஈடுபடும் சமயப் பிரசாரகர்களும் மிக முக்கியமான கருவி கள் என்ற அவர், ஆகையால் இந்தப் பிரிவினர் மீது நாடுகள் அதிக கட்டுப்பாட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இம்மாதம் 3ஆம் தேதி ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நிகழ்ந்த சுமார் 300 பேரைப் பலிகொண்ட வெடிகுண்டுத் தாக்குதலில் தமது குடும்ப உறுப்பினர்களில் நால் வரைப் பறிகொடுத்தவர் திரு இஸா. மேற்காசியாவிலும் வடஆப்பி ரிக்காவிலும் உள்ள சில ஆற்றல் மிக்க வட்டார உளவு நிறுவனங் களால் ஈராக்கும் சிரியாவும் பலி கடா ஆக்கப்பட்டதாகவும் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த, சுய தீவிரவாதப் போக்குடைய இளையர் களை போரின்போது தங்களது பீரங்கிகளுக்கு உணவாகப் பயன் படுத்திக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!