சோனியா, மன்மோகன் சிங் மீது வழக்குத் தொடுக்க அனுமதியில்லை

புதுடெல்லி: ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பில் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் மீது வழக்குத் தொடுப்பதற்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இத்தாலியிலிருந்து இந்திய விமானப் படைக்கு ஹெலிகாப்டர் வாங்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் முன்னாள் தளபதி தியாகி, அவரது உறவினர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இதே விவகாரத்தில் சோனியா, மன்மோகன் சிங் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!