‘கொலைக்கஞ்சா மாநிலமாக மாறி வருகிறது தமிழகம்’

சென்னை: தமிழகத்தில் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவ தாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டி உள்ளார். மேலும், கஞ்சா கடத்தலும் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டி உள்ள அவர், தமிழ கம் 'கொலை'க்'கஞ்சா' மாநில மாக மாறி வருவதாக தமக்கே உரிய வார்த்தை ஜால நையாண்டி யுடன் குறிப்பிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் ஒரே நாளில் பத்து பேர் 'அம்மா'வின் ஆட்சிப் பரிபாலனத்தில் படுபாதக மாக வெட்டிக் கொலை செய்யப் பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ள அவர், கடந்த 13ஆம் தேதி நடந்த கொலைச் சம்பவங்களைப் பட்டியலிட்டுள் ளார்.

"தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உயர் நீதிமன்ற வளாகத்திலேயே பாதுகாப்பை எல்லாம் மீறி வழக்கறிஞர் மணி மாறன் என்பவர் சரமாரியாக வெட்டப்பட்டுள்ளார். 13ஆம் தேதி அன்று மட்டும் சென்னை எழும்பூர் புகைவண்டி நிலையத்தில் 95 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டி.பி. சத்திரத் தில் 110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. "இன்னும் வெட்கக்கேடு! தமிழகக் காவல் துறையில் டிஜிபி யாக பணியாற்றிய, தற்போது மாநிலத் தலைமை தகவல் ஆணையர் பொறுப்பில் அதிமுக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ராமா னுஜம் அவர்களே சேலம் சென்ற போது தாக்கப்பட்டதாகவும் செய்தி வந்துள்ளது," என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். இத்தகைய சம்பவங்களை எல்லாம் தொகுத்து நாளிதழ் ஒன்று 'தமிழ்நாடு கொலை நாடு' என்றே தலைப்பிட்டு கட்டுரை தீட்டியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!