தமிழே ஆட்சி மொழி: நெடுமாறன் வலியுறுத்து

சென்னை: தமிழகத்தில் ஆட்சி மொழியாக தமிழே இருக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தி உள்ளார். தஞ்சையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், தமிழகத்தில் பயிற்று மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் தமிழ் இருக்க வேண்டும் என்பதே பெரும் பாலானோரின் விருப்பம் என்றார். இம்மாநாட்டில் கலந்து கொண்ட உலகத் தமிழர் பேரமைப் பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழர்கள் அனைவரும் பிற மொழிக் கலப்பின்றி அனைவரும் தமிழில் பேசவேண்டும் என்று வலியுறுத்தினார். "தமிழர்கள் தமிழில் பேச வேண்டும், தமிழிலேயே எழுத வேண்டும் என்பதே இந்த மாநாட் டின் நோக்கம். இந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நூற்றாண்டு விழாவும் கண்காட்சியும் நடத்த இருக்கிறோம்.

"தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழியாகவும் பயிற்சி மொழியாக வும் நீதிமன்ற மொழியாகவும் இருக்க வேண்டும். இதை தனித் தமிழ் இயக்கம் தொடர்ந்து வலியு றுத்தி வரும். "தமிழ்ப் பற்றாளர்கள் அனைவ ரும் இந்த நோக்கத்திற்காக ஒருங் கிணைந்து செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்," என்று பழ.நெடுமாறன் மேலும் தெரிவித்தார். தமிழை ஆட்சி மொழியாக அறிவிப்பதற்குத் தமிழக அரசு தயங்க வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார். முன்னதாக மாநாட்டு வளாகத்தில் அமைக்கப் பட்டிருந்த கண்காட்சியின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தனித் தமிழ் இயக்க நூல்கள், முதன் முதலில் அச்சான திருக்குறள் புத்தக நகல், 18ஆம் நூற்றாண்டில் வெளியான தமிழ் நூல்களின் நகல்கள் உள்ளிட்ட அரிய புகைப் படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!