அதிகாரிகளின் மெத்தனம்: ராமதாஸ் குற்றச்சாட்டு

சிவகாசி: சிவகாசி பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய நிவா ரணம் வழங்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். கடந்த 2ஆம் தேதி சிவ காசியில் உள்ள பட்டாசுக் கடையில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் பலியாகினர். எட்டு வீடுகள், ஆறு கடை கள் இடிந்து தரைமட்ட மாயின. இந்நிலையில் விபத்து நடந்த பகுதியை நேற்று முன்தினம் பார்வை யிட்ட ராமதாஸ், பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, பாமக சார்பில் உதவிகள் வழங்கினார். இதையடுத்து செய்தியா ளர்களிடம் பேசிய அவர், பட்டாசுக் கடை விபத்திற்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம் என குற்றம்சாட்டினார்.

"அதிகாரிகள் விதிமீறல் கடைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்திருந்தால் விபத்தை தடுத்திருக்கலாம். அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் ஒன்றும் அறி யாத அப்பாவிகளின் உயிர் கள் பலிவாங்கப்பட்டுள்ளன. 12 குடும்பத்தினர் வீடுகளை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர்," என்றார் ராமதாஸ். நடந்தவற்றுக்குப் பதில் கூற கடமைப்பட்டுள்ள அரசு மவுனமாக உள்ள தாகச் சாடிய அவர், இது வரை அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் விபத்து நடந்த இடத்திற்குச் செல்லவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை என்றும் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!