புரட்சித் தலைவி செய்த துரோகம்: தம்பிதுரை

கரூர்: முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்குத் துரோகம் செய்தவர் என்று கட்சிக் கூட்டத்தில் பேசியபோது தவறுத லாகக் குறிப்பிட்டார் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை. இதனால் கூடியிருந்த அதிமுகவி னர் மத்தியில் பரபரப்பு நிலவியது. நேற்று முன்தினம் கரூரில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சி யின் கொள்கை பரப்புச் செயல ருமான தம்பிதுரை திமுகவையும் அக்கட்சித் தலைவர் கருணாநிதி யையும் கடுமையாக விமர்சித்தார். கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையால் தமிழகத்துக்கு எந்தவித பயனும் இல்லை என்று சாடிய அவர், கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் பிரச்சினைகள் எதற்குமே தீர்வு காணப்படவில்லை என்றார். ஒரு கட்டத்தில் திடீரென உணர்ச்சிவசப்பட்ட அவர், "தமிழ் தமிழ் என்று சொல்லி, தமிழக மக்களுக்குத் துரோகம் செய்தவர் புரட்சித் தலைவி," என்றார்.

கருணாநிதி என்று குறிப்பிடு வதற்குப் பதிலாக முதல்வர் ஜெயலலிதாவை அவர் தவறுத லாகக் குறிப்பிட்டது, முகாமிற்கு வந்திருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்கூட்டத்தில் போக்கு வரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரும் பங்கேற்றிருந்தார். தம்பிதுரை பேசியதைக் கேட்டு அவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், தவறாகப் பேசியதை உணர்ந்தார் தம்பிதுரை. பின்னர், "தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்தவர் கருணாநிதி," என அவர் மீண்டும் குறிப்பிட்டார். "கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, கச்சத்தீவு, பாலாறு, காவிரி உள்ளிட்ட எந்தப் பிரச்சி னையும் தீர்க்கப்படவில்லை. திமுக அரசு அதற்கான முயற்சிக ளையும் மேற்கொள்ளவில்லை," என்று தொடர்ந்து பேசி நிலை மையைச் சமாளித்தார் தம்பிதுரை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!