ரூ.570 கோடி விவகாரம்: உண்மைகள் வெளிவரும் வகையில் விசாரணை நடத்த கருணாநிதி வலியுறுத்து

சென்னை: கொள்கலன்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.570 கோடி ரூபாய் தொடர்பாக எழுந் துள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் வகையில் சிபிஐ விசாரணை அமைய வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி இரவில் இவ்வளவு பெரிய தொகையைக் கொண்டு சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். "ரூ.570 கோடி பணம் எடுத்துச் செல்லப்பட்டபோது காவல்துறையினர் எத்தனை பேர் பாதுகாப்புக்குச் சென்றார்கள்? கோவை பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து எத்தனை மணிக்கு கொள்கலன்களை ஏற்றிச் சென்ற லாரிகள் புறப்பட்டன? ரூபாய் நோட்டுகளை பேக்கிங் செய்ய எவ்வகையான உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன?

"பணம் அனுப்புவது குறித்து ஏதாவது ஆவணங்கள் தயாரித்து அதில் கையெழுத்திடப்பட்டதா?" என்றும் பல்வேறு கேள்விகளை தமது அறிக்கையில் அடுக்கி உள்ளார் கருணாநிதி. பணத்தை ஏற்றிச்சென்ற லாரிகளின் உரிமையாளர்கள், அந்த லாரிகளின் பதிவுகள் பற்றிய உண்மைகளைக் கண்டறிய வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள இதுபோன்ற சந்தே கங்களுக்கு சிபிஐ முறையான விசாரணை நடத்தி உண்மைகளை உலகத்துக்கு அறிவிக்க வேண் டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

"உலை வாயை மூடலாம். ஊர் வாயை மூட முடியாது. ஒவ்வொரு நாளும் இந்தப் பிரச்சினை தமிழக மக்கள் மத்தியிலும் ஊடகத்தினர் மத்தியிலும் கனன்று கொண்டிருக்கிறது. நெருப்பை பஞ்சணைக்குள் மறைத்து வைக்கமுடியாது. சிபிஐயிடம் விருப்பு வெறுப்பற்ற நேர்மையான விசாரணையை மக் கள் எதிர்பார்க்கின்றனர்," என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். "கொள்கலன் லாரிகள் பிடிபட்டபோது அவற்றுடன் ரிசர்வ் வங்கியின் பிரதிநிதி உடன் வந்தாரா? பிடிபட்ட நபர்கள் ஏன் லுங்கியுடன் இருந்தார்கள்? அவர் கள் காவல்துறையைச் சேர்ந்தவர் களா? விசாகப்பட்டினம் எஸ்பிஐ வங்கியின் பிரதிநிதி, ரிசர்வ் வங்கியை அணுகி இவ்வளவு தொகை எடுத்துச் செல்லப் போவ தாகத் தெரிவித்தாரா?," என்று கருணாநிதியின் அறிக்கை யில் மேலும் பல கேள்விகள் எழுப் பப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!