இந்தியா: இருவரில் ஒருவர் போலி மருத்துவர்

இந்தியாவில் 'அலோபதி' எனப்படும் ஆங்கில முறை மருத்துவர் களாகப் பணியாற்றுவோரில் 57 விழுக்காட்டினர், அதாவது பாதிக் கும் மேற்பட்டோர் எந்த மருத்துவப் பட்டத்தையும் பெறவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரி வித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. அவர்களில் 31 விழுக்காட்டினர் பள்ளிக் கல்வியைத் தாண்டாத வர்கள் என்றும் கூறப்படுகிறது. 'இந்தியாவில் சுகாதார ஊழிய ரணி' என்ற தலைப்பின்கீழ் கடந்த மாதம் ஓர் அறிக்கையை வெளி யிட்டது உலக சுகாதார நிறுவனம். அதில், இந்திய கிராமங்களில் ஆங்கில மருத்துவர்களாக சேவை யாற்றுவோரில் 18.8 விழுக்காட்டினர் மட்டுமே முறையான மருத்துவக் கல்வித் தகுதியைக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆயுர்வேத மருத்துவர்களில் 60 விழுக்காட்டினர் உரிய மருத்துவப் பட்டத்தைப் பெற்றுள்ளனர். அது போல 46% யுனானி மருத்துவர்களும் 42% ஹோமியோபதி மருத்துவர்களும் முறையான கல்வித் தகுதியைப் பெற்றிருப்ப தாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது. இந்திய சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் விகிதம் குறித்து எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த அறிக்கை குறித்துக் கருத்துரைத்த இந்திய மருத்துவர் சங்கத்தின் போலி மருத்துவர் எதிர்ப்பு நிலைக் குழுத் தலைவர் டாக்டர் ஏ.வி. ஜெயகிருஷ்ணன், "போலி மருத்து வர்களை ஒழிக்க அரசாங்கம் எந்த முயற்சியையும் எடுப்பதில்லை. பல மாநிலங்களில், ஏராளமான எண்ணிக்கையில் போலி மருத்துவர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. சட்டம் கடுமையாக இல்லை. மோசடிப் பேர்வழிகள் பிடிபட்டாலும் பிணையில் வெளியாகும் அவர்கள் மறுநாளே மீண்டும் மருத்துவத் தொழிலில் இறங்கிவிடுகிறார்கள்," என்று ஆதங்கப்பட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!