புதுச்சேரியில் தாய்ப்பால் ‘ஏடிஎம்’

குறைந்த எடையுடன் அல்லது குறைப்பிரசவத்தில் பிறந்த குழந் தைகளுக்கு ஊட்டச்சத்து அளித்து அவர்களைக் காப்பாற்று வதற்காக புதுச்சேரியில் உள்ள ஜவகர்லால் முதுகலை மருத் துவக் கல்வி, ஆய்வு நிலையம் (ஜிப்மர்) தாய்ப்பால் வங்கியைத் திறந்துள்ளது. 'அமுதம் தாய்ப்பால் மையம் (ஏடிஎம்)' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வங்கி குழந்தைகளுக்குப் பாலூட்டுவது தொடர்பில் அன் னையருக்கு ஆலோசனைகளை யும் வழங்கும்.

"மாதந்தோறும் ஜிப்மரில் பிறக் கும் சுமார் 1,500 குழந்தைகளில் 30% குழந்தைகள் குறைந்த எடையுடனும் பெரும்பாலும் குறைப்பிரசவத்திலும் பிறக்கின் றன. ஆகையால், அக்குழந்தை களைக் காப்பாற்றும் வகையில் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு தாய்ப்பால் வங்கியை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது," என்றார் ஜிப்மர் இயக்குநர் சுபாஷ் சந்திர பரிஜா. பிறந்து ஆறு மாதங்கள் வரை அத்தகைய குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவதிலும் சந்தை யில் கிடைக்கும் பால் மாவுகளைக் கொடுப்பதிலும் இருக்கும் சிக் கல்களைக் கருத்தில்கொண்டு மற்ற மருத்துவமனைகளும் இது போன்று தாய்ப்பால் வங்கிகளை அமைக்க வேண்டும் என்றும் திரு பரிஜா கேட்டுக்கொண்டார்.

"தானமாகப் பெறப்படும் தாய்ப் பாலானது 62.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அரைமணி நேரம் காய்ச்சப்பட்டு பின் குளிர் விக்கப்படும். இதன்மூலம் கிருமி இல்லாப் பாலாக இருக்கும் என்பதுடன் அதிலுள்ள உயிர் வேதியியல், நோய் எதிர்ப்புச் சத்துகளும் தக்கவைக்கப்படும்," என்று அவர் விளக்கினார். அத்துடன், ஆரோக்கியமான குழந்தைகளைக் கொண்டுள்ள ஆரோக்கியமான அன்னையர்கள் தம் பிள்ளைகளின் தேவையைப் பூர்த்தி செய்தபின் தாய்ப்பால் தானம் செய்ய முன்வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!