கூகுள் நிறுவன விருது: 14 வயதில் பெற்று சாதித்த சென்னை பள்ளி மாணவர்

சென்னை: சமுதாயத்தில் தாக் கம் ஏற்படுத்தக்கூடிய வகை யில் ஆய்வறிக்கை அளித்த சென்னை மாணவர் அத்வை ரமே‌ஷுக்கு கூகுள் இந்தியா நிறுவனத்தின் விருது கிடைத்துள்ளது. 'சமுதாயத் தாக்கத்துக்கான விருது' என்ற பெயரில் வழங்கப்படும் அந்த விருதை தனது 14ஆவது வயதிலேயே பெற்று சாதித்துள்ளார் மாணவர் அத்வை. சமுதாயத்தில் நல்லவிதமான மாற்றங்களையும் தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஆய்வுக ளுக்கு மட்டுமே இந்த விருது கிடைக்கும். நடப்பாண்டில் இந்த விருதுக்காக 107 நாடு களில் இருந்து ஆய்வறிக்கைகள் வந்து சேர்ந்தன. அவற்றுள் ஆசிய அளவிலான பிரிவில் அத்வைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

சென்னையில் 10ஆம் வகுப்பு படித்து வரும் அத்வை, ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் மீனவர்களின் பாது காப்பையும் செயல்பாட்டையும் மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு பத்தாயிரம் அமெ ரிக்க டாலர் ரொக்கப் பரிசும் கிடைத்துள்ளது. "கூகுள் சமுதாய விருதைப் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனது திறனை மேலும் வளர்த்துக்கொள்ளவும், மேலும் பலவற்றை கற்றுக்கொள்ளவும் தூண்டுகோலாக அமையும்," என்கிறார் மாணவர் அத்வை. இம்முறை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகளில் இருந்து நூறு சிறந்த கருத்து களை மட்டுமே தேர்வு செய்துள் ளது கூகுள். அவற்றுள் 14 கருத்துகள் இந்திய மாணவர் கள் அளித்தவையாகும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!