திமுகவில் இணைந்தார் பழ.கருப்பையா

சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா திமுக வில் இணைந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருடன் இணைந்து திராவிட இயக்க வளர்ச்சிக்குப் பாடுபடப்போவதாகக் கூறினார். நேற்று முன்தினம் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்துப் பேசிய பழ.கருப்பையா, அவரது முன்னிலையில் திமுகவில் தம்மை இணைத்துக்கொண்டார். அதிமுக தலைமையுடன் ஏற் பட்ட கருத்து வேறுபாடு காரண மாக அக்கட்சியில் இருந்து நீக்கப் பட்டார் பழ.கருப்பையா. முன்னதாக 'துக்ளக்' பத்திரிகை ஆண்டு விழாவில் பங்கேற்றுப் பேசியபோது தமிழக அமைச்சர்கள், அதிமுக வின் செயல்பாடுகளை அவர் கடுமையாக விமர்சித்தார். இதன் காரணமாகவே அவருக்கும் அதிமுக தலைமைக்கும் இடையே மறைமுக மோதல் உருவானது.

தேர்தல் சமயத்தில் திமுகவில் அவர் இணையவில்லை. எனினும் பலரது எதிர்பார்ப்புக்கு ஏற்ப, இப்போது அந்தக் கட்சியில் இணைந்துள்ளார். இதற்கிடையே திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், டெல்லி முதல்வர்கள் மாநாட்டில் மாநில சுயாட்சி குறித்து குரல் எழுப்பப்பட்டுள்ளது திமுகவுக்கான தேசிய அங்கீகாரம் என பெருமிதம் தெரிவித்துள்ளார். "தற்போது மாநில விவகாரங்க ளில் மத்திய தலையீடு கூடாது என்றும் மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய சுயாட்சி தேவை என்றும் அழுத்த மாக குரல் எழுப்பப்பட்டுள்ளது," என்று கருணாநிதி கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!