மாயாவதியை தரக்குறைவாகப் பேசிய பாஜக பிரமுகர் இடைநீக்கம்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை விலைமாதுடன் ஒப்பிட்டுத் தரக்குறைவாக விமர் சித்த பாஜக துணைத் தலைவர் தயாசங்கர் சிங், கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சியினர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார், அவரைக் கைது செய்ய அவரது வீட்டிற்குச் சென்றனர். ஆனால், அவர் தலை மறைவாகி விட்டார். இதனை யடுத்து அசம்கார்க், பாலியா, லக்னோவின் பல இடங்களிலும் அவரைத் தேடிவருகின்றனர். இந்நிலையில், உ.பி.யில் தயா சங்கருக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலையில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

உ.பி. மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளதை அடுத்து பாஜக, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாகியுள்ளன. இந்நிலையில், தயாசங்கர் சிங், "பகுஜன் சமாஜ் கட்சியில் சீட் கேட்பவர்களிடம் மாயாவதி பணம் வசூலிக்கிறார். ஒரு கோடி கேட்பவருக்கு காலையில் சீட் கொடுத்தால், மாலையில் இரு கோடி கொடுப்பவருக்கு அந்த சீட் மாறிவிடுகிறது. தேர்தலில் போட்டியிட சீட்டை விற்பது, பாலியல் தொழிலை விடவும் மோசமானது," எனக் கூறினார். இந்த கீழ்த்தரமான விமர்சனம் பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்களிடம் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட நாடெங்கும் உள்ள கட்சித் தலைவர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தயாசங்கர் சிங் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். எனினும், சமாதானம் அடை யாத மாயாவதியின் தீவிர ஆதரவாளர்கள் உ.பி. முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளதால் உ.பி.யில் பதற்றம் நிலவுகிறது. உ.பி.யில் பெரும்பாலான ஊர் களில் கடைகள் அடைக்கப் பட்டன; போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. லக்னோ, பண்டா, பதேபூர், அம்பேத்கர் நகர், சுல்தான்பூர், பைரைச், காசியாபாத், ஆக்ரா, சாஜிகபூர் ஆகிய நகரங்களில் போலிசார் குவிக்கப்பட்டு பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கிடையே, தவறாகப் பேசிய தயாசங்கர் நாக்கை வெட் டிக் கொண்டு வருபவர்களுக்கு ரூ. 50 லட்சம் வழங்கப்படும் என பகுஜன் சமாஜ் கட்சியின் சண்டி கார் பிரிவுத் தலைவர் ஜன்னத் ஜஹான் அறிவித்துள்ளார்.

மாயாவதியை விலைமாதுடன் ஒப்பிட்டுப் பேசிய விவகாரம் தொடர்பில் பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் உ.பி.யில் உள்ள கஷ்ராத்காஞ் பகுதியில் கூடி பாஜக தலைவர் தயாசங்கரின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!