நதிகள் இணைப்புத் திட்டம்: உமா பாரதி உறுதி

புதுடெல்லி: நதிகள் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழகம் எப்பொழுதும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. ஆனால், கேரளா எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. எனவே, ஒப்புதல் அளிக்கும் மாநிலங்களுடன் மட்டும்தான் நதிகள் இணைப்புக் குறித்துப் பேசுவோம். இதை பிரதமர் மோடியும் தெளிவாகக் கூறியுள்ளார் என்று தெரிவித்தார் நீர் ஆதாரத் துறை அமைச்சர் உமா பாரதி. நதிகள் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் மக்களவையில் உறுதி அளித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க எந்த மாநிலத்தையும் நிர்பந்திக்க மாட்டோம். அவர்களாக வரும் வரை காத்திருப்போம். எனினும் நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவோம். இந்தத் திட்டம் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள திட்டமாகும். இதை பாஜக தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளோம். உச்ச நீதிமன்றம் கூட நாட்டின் நலன் கருதி நதிகள் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தலாம்," என்று தெரிவித்துள்ளது என்றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!