பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா உதவியுடன் பாகிஸ்தான் சுற்றுக்காவல்

புது­டெல்லி: இந்­தி­யா­வுக்­கும் பாகிஸ்­தா­னுக்­கும் இடையே சுமார் 13,300 சதுர கி.மீ. பகுதி "பாகிஸ்­தான் ஆக்­கி­ர­மிப்­பு காஷ்­மீர்" பகு­தி­ உள்­ளது. இப்­போது பாகிஸ்­தான் கட்­டுப்­பாட்­டில் உள்ள இந்தப் பகு­தி சுயேச்சை மாநி­ல­மாக இருக்­கிறது. ஆக்­கி­ர­மிப்­பு காஷ்­மீர் பகு­தி­யில் பாகிஸ்­தான் ராணுவ வீரர்­கள் மட்­டுமே இது­வரை முகாம் அமைத்­துத் தங்கி இருந்த­னர். அவர்­கள் அங்கு தீவி­ர­வா­தி­களுக்கு ஆயு­தப் பயிற்சி கொடுத்து இந்­தி­யா­வுக்­குள் அனுப்­பு­வ­தாக கூறப்­படு­கிறது.

இந்த நிலை­யில் கடந்த சில மாதங்க­ளாக ஆக்­கி­ர­மிப்­புக் காஷ்­மீர் பகு­திக்­குள் சீன ராணுவ வீரர்­களின் நட­மாட்­டம் இருப்­பது தெரியவந்தது. இந்த நிலை­யில் அந்தப் பகு­தி­யில் சீனா = பாகிஸ்­தான் ராணுவ வீரர்­கள் கைகோத்து ஒன்­றிணைந்து செயல்­படு­வது தெரிய வந்­துள்­ளது. நேற்று முன்­தி­னம் சீன ராணுவ வீரர்­களும் பாகிஸ்­தான் ராணுவ வீரர்­களும் ஒன்று சேர்ந்து காஷ்­மீர் எல்லைப்­ ப­கு­தி­யில் சுற்­றுக்­கா­வல் பணி­யில் ஈடு­பட்­ட­னர். இதன் மூலம் ஆக்­கி­ர­மிப்­பு காஷ்­மீர் பகு­தி­யில் பாகிஸ்­தா­னுக்கு ஆத­ர­வான நிலையைச் சீனா எடுத்­தி­ருப்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!