8 பெண்களை மணம்புரிந்த கல்யாணராமன் மீது புகார்

மதுரை: மதுரையில் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாணராமனைக் கைது செய்யக் கோரி போலிசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. மதுரை கே.புதூரைச் சேர்ந்தவர் சலாமியா பானு, 28. இவர் நேற்று மதுரை மாநகரப் போலிஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவைச் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருக்கும் விவரம்:- "எனக்கும், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2011ஆ-ம் ஆண்டு திருமணம் நடந்தது. "பின்னர், எங்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நாங்கள் விவா கரத்து செய்துகொண்டோம்.

"இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தஸ்லிமா என்ற பெண்ணுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. "தஸ்லிமா, தன்னுடைய உறவினர் காதர் பாட்சா என்பவர் வங்கியில் வேலை பார்ப்பதாகவும் அவரைத் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என அறிவுறுத்தினார். "இதைத்தொடர்ந்து தஸ்லிமா எனது பெற்றோருடன் திருமணம் குறித்துப் பேசி, சம்மதம் பெற்று எனக்கும் காதர் பாட்சாவுக்கும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. "நாங்கள் இருவரும் எனது தாய் வீட்டில் தங்கிய நிலையில் குடும்பம் நடத்தி வந்தோம்.

"திருமணமாகி பல நாட்கள் ஆகியும் அவர் வேலைக்குச் செல்லவில்லை. "இதுகுறித்து நான் கேட்டபோது, சரிவர பதில் கூறாமல் ஏமாற்றி வந்தார். "இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி காதர் பாட்சா வேலை விஷய மாக வெளியூர் செல்வதாகக் கூறிச் சென்றார். "அப்போது அவர் வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், 8 பவுன் நகை, ஏடிஎம் அட்டை ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு சென்றார்.

"இதுகுறித்துக் கேட்டபோது, வெளியூரில் இருந்து திரும்பி வந்தவுடன் கொடுத்துவிடுவதாகத் தெரிவித்தார். "இதைத் தொடர்ந்து, காதர் பாட்சாவை பற்றி விசாரித்தபோது சென்னை, திண்டுக்கல், வத்தலக் குண்டு உள்பட பல்வேறு பகுதி களைச் சேர்ந்த 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, 8-வதாக என்னைத் திருமணம் செய்து ஏமாற்றி உள்ளது வெளிச் சத்துக்கு வந்துள்ளது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன். "என்னை ஏமாற்றி மோசடி செய்த காதர் பாட்சா, திருமணம் செய்து வைத்த தஸ்லிமா, அவரது கணவர் கயூம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்," என்று சலாமியா பானு மனுவில் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!