காபூலில் இந்தியப் பெண் மீட்பு

புதுடெல்லி: காபூலில் கடந்த மாதம் கடத்தப்பட்ட இந்தியப் பெண் மீட்கப்பட்டுள்ளார். அனைத்துலக அறக்கட்டளை ஒன்றில் பணியாற்றிய 40 வயது ஜுடித் டிசவுசாவை சில போராளி கள் கடத்தியதாக சந்தேகிக்கப்படு கிறது. இந்நிலையில் நேற்று டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலில் ஜுடித் டிசவுசா பத்திரமாக மீட்கப் பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் உதவிய ஆப்கன் அதிகாரிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

கடந்த ஜூன் 9ஆம் தேதி காபூலில் பரபரப்பான பகுதியில் உள்ள அலுவலகத்துக்கு வெளியே ஜுடித் டிசவுசா கடத்தப்பட்டார். இதனால் ஜுடித்தின் குடும்பத்தினர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ஜுடித்தை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர். தற்போது காபூல் அதிகாரி களின் பாதுகாப்பில் பத்திரமாக உள்ள டிசவுசா விரைவில் புது டெல்லி திரும்புவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. காபூல் குற்றவியல் புலனாய்வுத் துறையின் தலைவரான ஃபிரைடூன் ஒபைடி, "வெள்ளிக்கிழமை மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கையில் டிசவுசா மீட்கப்பட்டார்," என்றார்.

காபூலில் கடத்தப்பட்ட ஜுடித் டிசவுசா. ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!