ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் தடைபட்ட மின்சாரம்

இந்தியாவின் ஹைதராபாத் நக ரில் உள்ள அரசு மருத்துவ மனையில் ஒரே நாளில் 21 நோயாளிகள் மரணமடைந்த சம் பவம் அதிர்ச்சியையும் சர்ச் சையையும் ஏற்படுத்தி உள்ளது. சுமார் 1,200 படுக்கைகளுடன் கூடிய காந்தி மருத்துவமனை யில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்த மரணச் சம்ப வத்திற்கு மின்தடை காரண மாகச் சொல்லப்படுகிறது. அன்றைய தினம் பிற்பகல் மூன்று மணியளவில் திடீரென்று மின்தடை ஏற்பட்டதாகவும் சிறிது நேரத்தில் மீண்ட மின்சாரம், மறுபடியும் போவதும் வருவது மாக இருந்தது என்றும் மருத்து வர்கள் தெரிவித்தனர்.

மின்தடை ஏற்படும்போது பயன்படுத்துவதற்காக மருத் துவமனையில் இருந்த நான்கு 'ஜெனரேட்டர்'களும் இயங்க வில்லை என்றும் அதன் காரணம் புரியவில்லை என்றும் அவர்கள் கூறினர். மாண்ட 21 பேரும் தீவிர அறுவை சிகிச்சைப் பிரிவை உள் ளடக்கிய சிறப்பு நோயாளிகள் வார்டு, பிரசவ வார்டு, செயற்கை சுவாசப் பராமரிப்புப் பிரிவு, கடுமையான நோய்கள் பரா மரிப்புப் பிரிவு, அவசரச் சிகிச்சை வார்டு ஆகியவற்றில் அனு மதிக்கப்பட்டு இருந்தவர்கள். சிறுவெப்பப் பெட்டகம் போன்ற குழந்தை உயிர்காப்புச் சாதனங் கள் இயங்காததால் சில குழந்தைகளும் மாண்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!