சென்னை: வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முற்றுகை

வழக்­க­றி­ஞர்­ செயல்­பாடு­களை முறைப்­படுத்­தும் புதிய விதி­முறை­களை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்­நீ­தி­மன்ற வளா­கத்தை முற்­றுகை­யிட்டு போராட்­டம் நடத்தி வரும் வழக்­க­றி­ஞர்­கள் நேற்று போலி­சா­ரின் பாது­காப்­புத் தடுப்­பு­களைத் தாண்டி உள்ளே நுழைய முயன்ற­னர். அவர்­களை தடுத்து நிறுத்­திய போலிசார் மீது போத்தல்­கள் வீசப்­பட்­டன. இதனால் அங்கு பதற்­றம் நில­வி­யது. சில இடங்களில், போலிசுக் கும் வழக்­க­றிஞர்­களுக்­குமிடையே தள்­ளு­முள்ளு ஏற்­பட்­டது. வழக்­க­றி­ஞர்­கள் நீதி­மன்ற வளா­கத்­தில் உரத்த குரலில் கை உயர்த்தி பேசக்­கூ­டாது, ஆவே­ச­மாக வாதி­டக்­கூ­டாது, நீதி­ப­தி­களை அவ­ம­திக்­கும் வகையில் பேசக்­ கூ­டாது, நீதி­ப­தி­யி­டம் பேசும்­போது இட அளவு நிர்­ண­யம், நீதி­மன்றம் நினைத்­தால் வழக்­க­றி­ஞர்­கள் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்க அதி­கா­ரம் உள்­ளிட்ட பல்வேறு சட்­டங்கள் இருப்­ப­தாக புதிய சட்ட திருத்­தத்­திற்­குத் தமி­ழக வழக்­க­றி­ஞர்­கள் கடும் எதிர்ப்­புத் தெரி­வின்ற­னர். இதனால் வழக்­க­றி­ஞர்­களுக்­கும் நீதி­ப­தி­களுக்­கும் மோதல் போக்கு வலுத்­துள்­ளது. இது தொடர்­பாக போராட்­டம் நடத்தி நீதி­மன்ற நட­வ­டிக் கைக்­குப் பாதிப்பு ஏற்­படுத்­திய 126 பேர் நேற்­று­முன்­தி­னம் இரவில் இடை­நீக்­கம் செய்­யப்­பட்­ட­னர்.

அதை­ய­டுத்து நேற்று சென்னை நீதி­மன்றத்தை முற்­றுகை­யிட்டு ஆயி­ரக்­க­ணக்­கான வழக்­க­றி­ஞர்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். போராட்­டத்தைக் கட்­டுப்­படுத்த இரண்டா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட போலிசார் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர். உயர் நீதி­மன்றத்­தின் அனைத்து நுழைவு வாயில்­களி­லும் பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. தலைமை நீதிபதி, நீதி­ப­தி­கள் வீடு­களுக்­கும் பாது­காப்பு போடப்­பட்­டுள்­ளது. இந்­நிலை­யில், விதிக்­கு­ழுவை சந்­தித்து வழக்­க­றி­ஞர்­கள் முறை­யி­டா­ததே போராட்­டத்­துக்­குக் காரணம் என்று சென்னை உயர் நீதி­மன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தெரி­வித்­துள்­ளார். "தலைமை நீதி­ப­தி­யாக இந்த விவ­கா­ரத்­தில் நான் எதுவும் செய்ய முடியாது. சட்­டத்­தி­ருத்­தத்தைத் திரும்பப்பெறுவது குறித்து விதிக்­கு­ழு­தான் முடிவு செய்ய வேண் டும்," என்று அவர் கூறி­யுள்­ளார். இதற்­கிடையே பாரி­முனைப் பகு­தி­யில் தடுக்­கப்­பட்ட வழக்­க­றி­ஞர் கள், அங்கு சாலை மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர். இதனால், சென்னை­யின் பல பகு­தி­களில் போக்­கு­வ­ரத்­துப் பாதிக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!