சோதனைக் குழாய் மூலம் பிறந்த 3,000 குழந்தைகள் ஒரே இடத்தில் ‘சங்கமம்’

சென்னை: அனைத்துலக ஐவிஎப் (சோதனைக் குழாய் குழந்தை) தின மான நேற்று முன்தினம் சோதனை குழாய் மூலம் பிறந்த சுமார் 3,000 குழந்தைகள் ஒன்றுகூடிய 'சங் கமம்' நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. வடபழனியில் உள்ள ஆகாஷ் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் சோதனைக் குழாய் மூலம் பிறந்த கைக்குழந்தை முதல் 15 வயது வரையிலான பிள்ளைகள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்தனர்.

அதிக அளவில் இரட்டைக் குழந்தைகள் கலந்துகொண்டனர். மருத்துவமனை இயக்குநர்கள் டி.காமராஜ், ஜெயராணி காமராஜ் குழந்தைகளுக்கு இனிப்புகளையும் பரிசுப் பொருட்களையும் வழங்கி னர். அதன்பின் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். குழந்தைகளின் பெற்றோர்கள் கூறும்போது, ‚"பல ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டோம். தொடர் சிகிச்சையும் பொறுமையும் இருந் தால் குழந்தை பிறக்க அதிகம் வாய்ப்பு உள்ளது," என்றனர். இந்தியாவில் முதல்முறையாக குழந்தையின்மைக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஆகாஷ் மருத் துவமனை தொடங்கப்பட்டது. இங்கு இதுவரை 15 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் பிறந்து உள்ளன. சோதனைக் குழாய் மூல மாக மட்டும் கிட்டத்தட்ட 5,000 குழந்தைகள் பிறந்துள்ளன. 54 வயதான பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளையும் சிலர் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை களையும் பெற்றெடுத்துள்ளனர்.

சோதனைக் குழாய் மூலம் பிறந்த குழந்தைகளும் அவர்கள் பிறப்பதற்குக் காரணமான பெற்றோர்களும். படம்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!