கலாம் சிலை நாளை திறப்பு

ராமேசுவரம்: முன்னாள் அதிபர் அப்துல்கலாம் கடந்த ஆண்டு ஜூலை 27ஆம் தேதி வடகிழக்கு மாநில சுற்றுப்பயணத்தின்போது மரணமடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான ராமேசுவரம் அருகே உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நாளை (புதன்கிழமை) கடைப்பிடிக்கப்படு கிறது. இதையொட்டி நினைவிடத் தில் அப்துல் கலாமின் ஏழு அடி உயர வெண்கலச் சிலையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்துவந்தன.

ஹைதராபாத்தில் தயார் செய் யப்பட்ட வெண்கலச் சிலை நேற்று முன்தினம் வேன் மூலம் நினை விடத்துக்குக் கொண்டு வரப் பட்டது. சிலை அமைப்பதற்கான பீடம் அமைக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளது. அந்தப் பீடத்தில் சிலையை நிறுத்தும் பணி நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி காணொளி மூலம் நாளை இந்தச் சிலையைத் திறந்து வைக்கிறார். மணிமண்ட பத்துக்கு அடிக்கல் நாட்டுவதை யும் காணொளி மூலமே தொடங்கி வைக்கும் அவர், அப்துல் கலாம் நினைவுதின உரையை நிகழ்த்த உள்ளார். பேய்க்கரும்பில் நடைபெறும் நினைவுதின நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, மனோகர் பாரிக்கர், பொன்.ராதா கிருஷ்ணன், சுபாஷ் ராம்ராவ் பாம்ரி ஆகியோருடன் தமிழக அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.

அப்துல் கலாமுக்குச் சிலை வைப்பது இஸ்லாமிய மார்க்கத் துக்கு எதிரானது என்று ராமநாத புரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை ஏற்கெனவே கருத்துத் தெரி வித்துள்ள நிலையில் நாளை அவரது சிலையைத் திறப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. தங்களது கருத்தை அப்துல் கலாம் குடும்பத்தினருக்குத் தெரி வித்திருப்பதாகக் கூறிய உலமா சபையினர், சிலை திறப்பு நிகழ்ச் சிக்கு எவ்வித இடையூறும் செய் யப்போவதில்லை என்று தெரி வித்துள்ளனர். நினைவிடத்தில் தற்காலிக அருங்காட்சியகம் ஒன்றும் அமைக் கப்பட்டுள்ளது. அதில் வைப் பதற்காக அப்துல்கலாம் பயன்படுத் திய பொருட்கள் உள்ளிட்டவையும் ஏற்கெனவே திரட்டப்பட்டுள்ளன.

அப்துல் கலாம் முழு உருவச் சிலை நிறுவப்படுவதற்கான பீடம். படம்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!